86 சிவன் 07/08/2017 7.20 am
பல்லவி
பசுபதியே பரமசிவனே பார்வதி மணாளனே பகவனே
திசை தெரியாத தீனனுக்கு துருவ நக்ஷத்திரம் நீயே
பசுபதியே
அனுபல்லவி
பசி தாகம் போல் வாட்டிடும் பிறவி நோயை விரட்டிடு
கசிந்துருகிக் கதறுகிறேன் கலி தீர்ப்பாய் கடவுளே
பசுபதியே
சரணம்
இருவர் தாதையே இம்மை மறுமையாம் இருள் தீர்ப்பாய்
கருணாமயனே கற்பகவல்லி காந்தனே அருணாசலமே
கரும வினைகள் காற்றாய்ப் பறந்திடச் செய்வாய்
தருமமிகு மயிலையில் செங்கோலோச்சும் தயாநிதியே
பசுபதியே