84 கனகதாரா ஸ்தோத்திரம் 04/08/2017
பல்லவி
வறுமைக் கொடுமையால் வதனம் வாடி வதங்கி
சிறுமை பட்டல்லாடிய மூதாட்டிக்கு முனிவரிரங்கி
வறுமைக்
அனுபல்லவி
உருகிய மனத்தால் உள்ளங் கனி ந்துரைத்த
அருமையான துதிப்பாடல் கனகதாரா தோத்திரமே
வறுமைக்
சரணம்
சங்கரர் அருளிச் செய்த பாடல் கேட்டவுடன்
சங்கடம் தீர்க்கும் சங்க்ரிஷ்ணன் துனைவி
மங்கள மாது மனங்கனிந்து மழை பொழிந்தாள்
தங்க நெல்லிக்கனியாகவே கலி தீர்த்தாள்
வறுமைக்
0 Comments:
Post a Comment
<< Home