79 சிவன் 29/07/2017
பல்லவி
வேட்டை மார்க்கமாய் வந்து வினை தீர்த்திடுவீர் சிவனே
மாட்டேன் மாட்டேன் நினது பதம் விடமாட்டேன் வீரனே
வேட்டை
அனுபல்லவி
கோட்டை அரண் போல் நின்று பகைவரறுவரை அழித்திடுவீர்
சாட்டையாகி அகிலமனைத்தையும் ஆட்டுவிக்கும் ஆண்டவனே
வேட்டை
சரணம்
தினம் துதிப்பேன் திருநீறு பூசிய திருமேனியனே திண்ணனே
மனக்கவலையனைத்தும் மறைந்திடுமே மகாதேவனருளால்
தனம் தான்யம் வீடு வாசல் மாடு மனை ஏதும் வேண்டிலேன்
நினைநாளும் நினைந்துருகுவேன் நீலகண்டனே நீயே கதி
வேட்டை
0 Comments:
Post a Comment
<< Home