71 பிரம்மா வாக்கு 10-01-2017
பல்லவி
மூன்று குணம் கொண்டு
அலைந்திடும் மனிதா
சான்றோர் வாக்கின் படி
சடுதியில் திருந்திடு
மூன்று
அனுபல்லவி
தோன்றிடும் தேவர் குணமாம்
போகம் தனை
மீண்டும் மீண்டும்
மிதமாக்கிடு – தாம்யம்
மூன்று
சரணம்
மனித குணத்தின் படி மனம் பேராசைக் கொண்டு
தினமும் திரிந்திடும்-
மற்றவர்க்கு அளித்திடு – தத்தம்
சினம் கொண்டு சிவந்திடும்
அரக்கர் குணம் வந்தால்
கனிவுடன் இரக்கம்
கொள்வாய் – தயஸ்வம்
மூன்று
0 Comments:
Post a Comment
<< Home