69 ஆத்மன் (கீதை, அத். 2) 7-12-2016
பல்லவி
ஆயுதம் அறுக்காது தீஅதுவும் தீண்டாததனை
வாயுதான் உலர்த்தாது
நீரும் நனைக்காததனை
ஆயுதம்
அனுபல்லவி
காயந்தான் மரித்தாலும்
சாகாது ஆத்மா
சாயாது நிலைத்திருக்கும்
சாஸ்வதமாய்
ஆயுதம்
சரணம்
ஆடைகள் கிழிந்திட்டால் கணத்தில்
களைந்திட்டு
சூடுவோம் வண்ணப்
புத்தாடைகளை வனப்புடன்
கேடு கெட்டு சரீரம் அழிந்து
ஒழிந்து விட்டாலும்
தேடியே அடைந்திடும்
புத்தம் புது சரீரங்களை
ஆயுதம
0 Comments:
Post a Comment
<< Home