66 வேங்கடமுடையான் 23-09-2016
பல்லவி
வேங்கடமுடையானை
வேண்டிட்டால் வேதனை தீருமே
தாங்கவொண்ணாத் துயரம்
போம் தளராதே தவிக்காதே
வேங்கட
அனுபல்லவி
தீங்கெலாம் நீங்கிடும்
தீவினை போம் திகைக்காதே
ஓங்கும் புகழுடையானை
ஓங்கார ஸ்வரூபனை ஓம்பிடு
வேங்கட
சரணம்
அன்புடன் அவனை
வணங்கிட்டால் ஆனந்தம் பொங்கிடும்
நண்பனைப் போல் நாளும்
துணை நின்றிடுவான்
இன்பம் கூடும் இருவிழிகள்
ஒளிர்ந்திடும் இயல்பாகவே
நன்மைகள் நாடி வரும்
நாளும் நல்லதே நடந்திடும்
வேங்கட
0 Comments:
Post a Comment
<< Home