56 கிருஷ்ணன் 6 13-12-2015
பல்லவி
யாரையா நீ யாதவக் குளத்தில் ஒளிர்ந்த
கார்மேக வண்ணாக் கண்ணாக் கலாதரனே
யாரையா
அனுபல்லவி
நீர்நிலையில் கன்னிகளுடன் விளையாடிய சிறுவனா
வீரமிகுக் கஞ்சனை வீழ்த்தியப் போராளி தானோ
யாரையா
சரணம்
திருடனா தினமும் வெண்ணைக் கொள்ளைக் கொண்ட
உருக்குமணி தன் உளம் கவர்ந்தக் உன்னதக் காதலனா
தருமனக்குத் துணைப்புரிந்துத் தீயாரை அழித்தவனா
கரும வினைகளைக் கலைந்தருளும் கடவுளா
யாரையா
0 Comments:
Post a Comment
<< Home