50 உபநிஷதப் பாடங்கள் 2 26-9-2015
பல்லவி
நீராடப் பொய்கை நாடியக் களிறொன்று
சேறாடி வந்தாற்போல் ஆகலாமாப் பேதையே
நீராடப்
அனுபல்லவி
சீரான மானுடப் பிறவி சஞ்சிதப் பாவந்தனைப்
போராடிப் போக்கவன்றோ? போதுமிந்தப் பேராசை
நீராடப்
சரணம்
கர்மேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும்
தர்ம சிந்தனைக் கொண்டு முன் வினைக் கழிக்க
மர்மமிலாக் கணவாய்கள் அல்லவா மனிதா
கர்மங்களை சேர்க்கும் கருவிகளாகா கவனி
நீராடப்
0 Comments:
Post a Comment
<< Home