49 உபநிஷதப் பாடங்கள் 1 21-09-2015
பல்லவி
முத்து ரத்தினங்கள் முக்தி தரும் பாதையில் இரா
கத்திமுனை மேல் நடப்பதுப் போலாகும் கவனித்திடு
முத்து
அனுபல்லவி
நித்திரையினின்று சட்டென எழுந்திடு விழித்திடு
சத்தியம் தவறாதவரை நாடிப் பணிந்துணர்ந்திடு
முத்து
சரணம்
கடவல்லி உபநிஷத்தில் காலன் அளித்தப் பாடமிது
சடுதியில் உணர்ந்திட்டான் பாலன் நசிகேதனவன்
கடும் தவமோ யாகமோ செய்தால் மட்டும் போதாது
விடுதலைப் பெற்றிட விவேகம் வேண்டும் விழுத்திடு
முத்து
0 Comments:
Post a Comment
<< Home