44 கிருஷ்ணன் 4 05-09-2015
பல்லவி
ஏன் பிறந்தாய் எட்டாம் நாளன்று இடைக்குலத்தே
தான் தனதென்ற தாகங்களைத் தணித்திடவோ
ஏன் பிறந்தாய்
அனுபல்லவி
மான் புலியதனைக் கண்டு மருண்டோடுவதுப் போல
நான் நரகபயத்தில் நடுங்காதிருக்க நாதியாகிடவோ
ஏன் பிறந்தாய்
சரணம்
கஞ்சனுக்கு கதிமோக்ஷமளித்திடவோ கண்ணா வந்தாய்
பஞ்சத்தில் வாடும் மக்களுக்கு மழை போல வந்தாயோ
தஞ்சமென்று வந்து தடுமாறும் உயிர்கட்கு தயவளிக்கவோ
கஞ்சமலருறைக் கருணாமயிக் கடைக்கண் ஜாடைக் கணடோ
ஏன் பிறந்தாய்
0 Comments:
Post a Comment
<< Home