40 ஏன்?
பல்லவி
கானாமிர்தம் காதால் கேட்டுக் களித்திட்டையே
ஞானாமிர்தம் கசந்துக் குமட்டுவதேனோ அறியேனே
கானாமிர்தம்
அனுபல்லவி
வானவில்லின் நிறமனைத்த ஆசைகள் திகட்டவில்லை
தேனனைய தேவ விசாரங்கள் வாராது விலகுவதேனோ
கானாமிர்தம்
சரணம்
அருமருந்து வியாதிகள் விலக அருந்தவில்லையே
திருமந்திரமோத தினமும் நேரம் கிட்டவில்லையே
விருந்தென அறுசுவைகள் ஆனந்தமாய்ப் புசித்தாலும்
கருவாய் மறுபடி வாராதிருக்கக் நினைக்கவில்லையே
கானாமிர்தம்
0 Comments:
Post a Comment
<< Home