33 திருந்திடு மானிடா
பல்லவி
மதுமேகமுடையவன் இனிப்பினைத் தின்றாற் போல்
விதிப் பயன் நெருக்கும் போது ஆசைக்கு அடிமையானாயே
மதுமேக
அனுபல்லவி
சதிராடும் மாது மது தனமென்று அலைகின்ற
புதிரெனக்குப் புரியவில்லை திருந்திடு மானிடா
மதுமேக
சரணம்
நெருப்பைப் பூவேன்றுத் தொட்டிடும் மகுவா நீ
மாருதி சூரியனைப் பழமென்று நெருங்கினாற் போல்
திருடன் பண வேட்டையாடி சிறை
அடைந்தாற்போல்
திரும்பவும் பிறவிச்சுழலில்
சிக்காதே சிந்திப்பாய
மதுமேக
மதுமேக
0 Comments:
Post a Comment
<< Home