Sunday, July 26, 2020

32 சிவன் 5


                                                     பல்லவி

மறுபடியும் ஜனன மரண சுழலில் சிக்கிட்ட பின்னே
இறுக்கிடும் இம்மை மறுமைப் பிணியும் வாட்டுதே
                                                                                 மறுபடியும்

                                              அனுபல்லவி

கறந்த பாலினில் கடுகளவு விஷம் கலந்தாற் போல்
சிறந்த சிந்தனையுள் சீர்கெட்ட ஆசையால் அலைகிறேனே
                                                                               மறுபடியும்

                                                  சரணம்

அம்மையப்பா ஆனந்தத் தாண்டவமாடும் அத்தா ஆண்டையே
நிம்மதியின்றி சாட்டையில்லா பம்பரம் போல தவிக்கிறேனே
தும்பி போல்  நிதமும் தேன் தேடித் திரிந்தலைந்திடுமெனது
சும்மா இருக்கும் சிவனே சித்தம் தெளிந்திடச் செய்வாய்
                                                                             மறுபடியும்

0 Comments:

Post a Comment

<< Home