27 கபாலீஸ்வரர் 27-07-2015
பல்லவி
தருணமிதைத் தவறவிடாதே தாமதமேன் தயக்கமேன்
கருணாமூர்த்தி கபாலீஸ்வரனைக் கணத்தில் தொழுதிடத்
தருணமிதைத்
அனுபல்லவி
வருணிக்கலாகத வசீகரனை வாமதேவனை சிவனை
அருணத் தாமிர வர்ணத்தானை வேண்டிக் கொண்டாடிட
தருணமிதைத்
சரணம்
மயிலம்பதியில் தடுத்தாட்கொண்டானைத் தந்தையை
ஒயிலானக் கற்பகாம்பிகா மணாளனை மதிமுடியானை
செயலற்று மதிகெட்டு முதுமை மூப்படையுமுன்னே
அயனான அம்பிகை நாதனை அருட் கடலை அனுகிடத்
தருணமிதைத்
0 Comments:
Post a Comment
<< Home