23 ரங்கநாதர் 26-07-2015
பல்லவி
ரங்கநாதனே ரமாகாந்தனே ரம்யனே சயனித்ததேனோ
கங்காதரன் மைத்துனனே கருணையுடன் காத்து
ரக்ஷிப்பீர்
ரங்கநாதனே
அனுபல்லவி
சிங்கமுகங்கொண்டடு சினத்துடன் ஹிரன்யாசுரனை
தங்கள் துடை மீதிட்டு
சம்ஹரித்ததால் களைத்தீரோ
ரங்கநாதனே
சரணம்
பன்றியாகிப் பாயாய் சுருட்டிய பூமியை ஏந்தியதனால்
கன்றோடுப் பசுக் கூட்டங்களைக்
காத்து நின்றதினால்
குன்றமேறித் திருமலை
நாயகனாய் நிலைத்து நின்றதால்
மன்றாடிய மங்கைக்கு
சீலைக் கொடுத்ததால் அயர்ந்தீரோ
ரங்கநாதனே
0 Comments:
Post a Comment
<< Home