20 கார்த்திகேயன் 24-07-2015
பல்லவி
கருணாமயனே கார்திகேயனேக் காத்திடுவாய்
சரணமடைந்தேன் சடுதியில் வந்தருள்வாய்
கருணாமயனே
அனுபல்லவி
சரவணபவனே ஷண்முகனே சுப்ரமண்யனே
சுரசேனா நாயகனே சூரபத்ம சம்ஹாரகனே
கருணாமயனே
சரணம்
வள்ளி தெய்வானை மணாளனே வரமருள்வாய்
கள்ளர்கள் அறுவரையும் அழித்தொழித்திடுவாய்
அள்ளித் தருவாய் அருளனைத்தும் அ\டியவர்க்கே
உள்ளம் கனிந்துருக உன்னைத் தொழிதிடுவேனே
கருணாமயனே
0 Comments:
Post a Comment
<< Home