12 கணபதி 2 03 -07-2015
பல்லவி
வருவாய் வரமருள்வாய் வாதாபி கணபதியே
விரைந்தோடி வருவாய் வினை தீர்ப்பாய் விநாயகனே
வருவாய்
அனுபல்லவி
கரை காணாக் கவலைகளைக் களைந்தெறிவாய் கணபதியே
திரை கடலனைய தீவினை புரிந்த தீனனைக் காத்திடுவை
வருவாய்
சரணம்
தருணமிதே தயை புரிவாய் தயாபரனே
கருணா மூர்த்தியே கணேசனே உமாசுதனே
வரூணிக்கலாகாது வணங்குவேன் வரகணபதியே
திருடனுக்கும் தினமும் திவ்ய தரிசனம் தருவாய்
0 Comments:
Post a Comment
<< Home