9 காமாக்ஷி 22-06-2015
பல்லவி
நின்னைத் தேடி நினைந்துருகினேன் நித்தமும்
அன்னயின்றி அழுதிடும் மகவினைப் போலவே
நின்னைத்
அனுபல்லவி
கன்னல் வில்லேந்தியக் கயல்விழியாளே
காமாக்ஷி
என்ன தவம் செய்தேனோ
நின்னைப் பாடிடவே
நின்னைத்
சரணம்
அடைக்கலம் என்று அனுகிட்ட
அடியேன் எந்தனுக்கு
கடைக்கண் பாராய்
கருணாம்பிகே கருணைக்கடலே
விடை தேடி வீணாய்
அலைந்திடும் வீணன் எனக்கு
மடை திறந்தாற்போல் அருள்
வெள்ளம் அளித்திடுவாய்
நின்னைத்
0 Comments:
Post a Comment
<< Home