2 கிருஷ்ணன் II 02-06-2015 9.00 am
பல்லவி
இஷ்ட தேவதையே இனிய கானம் இசைத்திடும் இன்பனே
கஷ்டங்களைக் கணப்
பொழுதினில் களையும் கண்ணனே
இஷ்ட
அனுபல்லவி
துஷ்டர்கள் துகில் உரிந்திடும் போதினிலேக் கனிவுடன்
இஷ்டமுடன் கிருஷ்ணைக்கு சீலைமழை
பொழிந்தனையே
இஷ்ட
சரணம்
மலைபோல் வரும் துயரைப் பனி போல் நீக்கிடும்
மலை தூக்கி நின்றாடிய மதன
கோபாலனே கோவே
நிலையாக நின்றிடும்
முன்வினைப் பயன்களையும்
கலைவாணா கண்ணா
கருணாமூர்த்தியே களைந்திடுவை
இஷ்ட
0 Comments:
Post a Comment
<< Home