1 கிருஷ்ணன் 10-1-2015
பல்லவி
காணக்காண இனிக்குதடா உன் கனி உருவம்
கேட்கக் கேட்க ருசிக்குதடா உன் வேணுகானம்
காணக் காண
அனுபல்லவி
வானவில்லைக் கண்டு கான மயிலாட
தேனடைகள் நெகிழ்ந்து தேன் சொரிந்திட
காணக் காண
சரணம்
கோபியர்கள் நெகிழ்ந்துருகி நின்னை தொழுதேத்த
தாபத்ரயங்களைத் தீர்த்திடுவ்வையே தயாபரனே
சரணமென்று நம்பி வந்த எந்தனக்கு நாயகனே
மரண பயம் இல்லாதிருக்க அருளிடுமுன்னைக்
காணக் காண
0 Comments:
Post a Comment
<< Home