4 கணபதி 07-06-2015
பல்லவி
கவிகட்கு எல்லாம் கவியே கலி தீர்க்கும் கணபதியே
தவிக்கும் எந்தனுக்கு பவரோகம் தீர்திடுவாய் கடவுளே
கவிகட்கு
அனுபல்லவி
சிவபுத்திர ரத்தினமே சீரார் உமையவள் மைந்தனே
நவரத்தின நாயகனே நாளும் அருளளித்திடுவாய்
கவிகட்கு
சரணம்
தடைகளைத் தகர்த்தெடுக்கும் தயாநிதியே
மடை திறந்தாற்போல் கருணை வெள்ளம் தருவையே
தினமும் நினைப் போற்றி நினைத்திட்டால் நித்யத்வம் கூடுமே
மனவியாகூலம் அனைத்தையும் தகர்த்தெறிவாயே தந்தையே
கவிகட்கு
0 Comments:
Post a Comment
<< Home