3 ஹனுமான் 21.40 hrs 04-06-2015
பல்லவி
அஞ்ஜனி புத்ரனே ஆபத்பாந்தவனே ஆஞ்சநேயனே
கெஞ்சும் ஏழை எந்தனுக்கு ஏற்றமளித்திடுவாய்
அஞ்சனி
அனுபல்லவி
வஞ்சமில்லா அடியவர்க்கு வரமளிப்பவனே
கஞ்சமலருறை சீதைக்கடியவனே சீராளா
அஞ்ஜனி
சரணம்
அருமருந்துடை மலை எடுத்து மாவீரனைக் காத்தாய்
பெரும் பிணியாம் பிறவிக் கடலினைக் கடந்திட
சேது ஒன்றினைக் கட்டி ராமனிடம் எனை சேர்ப்பாய்
மாதுஸ்ரீ சீதையின் அருள் பெற்றுத் தந்திடுவாய்
அஞ்சனி
0 Comments:
Post a Comment
<< Home