8 திருப்பதி வெங்கடேசன் 15-06-2015
பல்லவி
திருப்பதி வாசனே திருமகள் நேசனே
திருப்தியில்லா தீனன் எனக்கருள்வாய்
திருப்பதி
அனுபல்லவி
வருத்தத்தால் வாடுமெந்தனுக்கு வரமருள்வாய்
செருக்கினால் சீரழியாதிருக்கச் செய்திடுவாய்
திருப்பதி
சரணம்
ஏழுமலை ஏறி தரிசிக்க வந்த எந்தனுக்குப்
பாழும் பவரோகம் அழியப் பாலிப்பாய்
தோழனுக்குத் தோழனாய் தோன்றிடும் தயாநிதியே
வேழத்தினுக்கு மோக்ஷமளித்த வேங்கட நாயகனே
திருப்பதி
0 Comments:
Post a Comment
<< Home