7 சிவன் 13-6-2015
பல்லவி
வாழி நீ சிவனே வையத்தினை ஆள்வோனே
ஊழித் தாண்டவமாடும் உன்மத்தனே உமாபதியே
வாழி நீ சிவனே
அனுபல்லவி
பாழும் பிறவி எடுத்த பாமரன் எனக்கு
பரமனே
ஊழ்வினை ஒழித்திடலாகாதா உத்தமனே உய்விப்பாய்
வாழி நீ சிவனே
சரணம்
உடுக்கைக் கொண்டு ஓங்காரமுதலாம் அனைத்து
உலகமும் உய்ந்திட ஒலிரூபம் அளித்தவனே
தெற்கமர்ந்து ஞான முத்திரை தெளிவித்தனையே
தர்கவாதமாம் நியாயத்தைத் தெரிந்தளிவித்தனையே
வாழி நீ சிவனே
0 Comments:
Post a Comment
<< Home