6 கார்த்திகேயன் 9-6-2015
பல்லவி
ஐயனுக்குஐயனே அருளானந்த முருகனே
கயவறுவரைக் களைந்திடும் கந்தனே
ஐயனுக்கு
அனுபல்லவி
ஜெயானந்த மூர்த்தியே ஜம்புகேசன் மகனே
தயானந்த ஸ்வரூபனே தகப்பன் சாமியே
ஐயனுக்கு
சரணம்
மும்மலமும் முற்றும் ஒழித்திடும் முதல்வனே
இம்மையில் மறுமை தரும் ஈசன் மகனே
அம்மையின் அருள் பெறவே அருகழைப்பாய்
செம்மையான செந்தூர் வாழ் சேவற்கொடியோனே
ஐயனுக்கு
0 Comments:
Post a Comment
<< Home