5 கிருஷ்ணன் III 31-05-2015
பல்லவி
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குணக் குன்றே குன்றினைக் குடையாக்கினையே
குறை
அனுபல்லவி
நிறைவில்லா மனதினால் நிம்மதியிழந்து வாடும்
கறைபட்டுக் கலங்கிடும் எந்தன் மனதிற்கும்
குறை
சரணம்
வேணுகான மதனில் வேதமந்திரம் பொழிய
காணும் காட்சிகளில் கவித்வம் கறை புரள
சுந்தர வதனமதில் சுரமழை பொழிந்திட
சிந்தை விசாரமேதுமின்றி நின் நினைவொன்றாலே
குறை
0 Comments:
Post a Comment
<< Home