10 சிவன் 2 24-06-2015
பல்லவி
சிவாய நமவென்று சிந்தித்தால் சித்தி கூடும்
பவானி மணாளனைப் பணிந்திட்டால் பாவமொழியும்
சிவாய
அனுபல்லவி
ஸ்வாதித் திருநாளன்று விழும் மழைத்துளிக்காக ஏங்கிடும்
ஸ்வாததகப் பக்ஷியினைப் போலவே ஜபித்திடு நித்தமும்
சிவாய
சரணம்
நாளும் நாயகனை நமஸ்கரித்தால் நாதனவன்
கோளும் தினமும் கோபம் கொள்ளாதிருக்கச் செய்வன்
தேளும் பாம்பும் துன்பம் செய்யா துணிவடைவாய்
வாளும் வேலும் வஞ்சனை
செய்யாது பஞ்சாக்ஷரமாம்
சிவாய
0 Comments:
Post a Comment
<< Home