11 சிவன் 3 24-6-2015
பல்லவி
கல்லுங் கனிந்துருகக் கதறுகின்றேன் காப்பாற்றும்
புல்லுக்கும் நீர் வார்க்கும் புண்ணியனே புகலளிப்பீர்
கல்லுங்
அனுபல்லவி
வில்லேந்திய வீரா விமலா பினாகபாணியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நற்கதி நீயே
கல்லுங்
சரணம்
மலைமகள் மனாளா மதன தகனஞ் செய்தனையே
உலை நெருப்பில் உருகும் எந்தனுக்கு உதவுவீர்
சிலை போல் நிற்கலாகுமா நிமலா சிவனே சீராளா
விலை போகா வீணனுக்கு வீடுமோக்ஷமளிப்பீர்
கல்லுங்
0 Comments:
Post a Comment
<< Home