18 காளி 19-07-2015
பல்லவி
காளிகா பரமேஸ்வரியே காக்கும் தெய்வமே
நாளும் உன்னை நான் வணங்கிடவே வரமருள்
காளிகா
அனுபல்லவி
தூளாய் துகளாய் புல்லாய்ப் பூண்டாய்ப் பின்னர்
ஆளாய் வந்திட்ட அநாதை எந்தனுக்கு அருள்வாய்
காளிகா
சரணம்
தாண்டவமாடி நீ தரணிதனைத் தவிக்கச் செய்கையில்
வேண்டுமென்று நின் கோபம் தணித்தாட்கொள்ளவே
ஆண்டவன் நின்னடிக் கீழ் பணிந்து வந்திடவே
மீண்டும் புன்னகைத்த சாந்த நாயகியே சரணம்
காளிகா
0 Comments:
Post a Comment
<< Home