17 சிவன் 4 18-07-2015
பல்லவி
ஊழித் தாண்டவமாடும் உமாபதே உன்மத்தனே
பாழும் பிறவி எடுத்த பாமரனுக்குப் பதமருள்வாய்
ஊழி
அனுபல்லவி
ஏழுபிறவியோ எத்தனை முறை எடுத்தாலும் ஏந்தலே
வாழும் தெய்வம் உந்தனை வந்தனை செய்திட செய்வாய்
ஊழி
சரணம்
வில்லேந்தி வினை தீர்க்க வந்திடுவாய் நாணவிழ்த்திட்டு
கல்லாய் மண்ணாய் மரமாய் மலையாய் மற்றும
எல்லாமும் ஆகி நிற்கும் எந்தன் இதய தேவனே
பொல்லாப்பின்றிப் புண்ணியம் பெறப் பேரருள்வாய்
ஊழி
0 Comments:
Post a Comment
<< Home