15 மீனாக்ஷி
பல்லவி
கயல் கண்ணாளே காருண்யவதியே, கடைக்கண் திறவாய்
மையல் கொண்டு மதியிழந்த மனிதனெனக்கு வரமருள்வாய்
கயல் கண்ணாளே
அனுபல்லவி
தயாநிதியே தாயே தடுத்தாட்கொள்ளும் தேவதையே
வியாகுலந் தீர்த்திடுவாய் விழிக்கடைத் திறந்து நீயே
கயல் கண்ணாளே
சரணம்
கருணையால் மதனனுக்கு மறுஉயிர் அளித்தனையே
அருணோதயத்திலும் ஆதவனுக்கு ஒளியளிப்பவளே
தருணமிதே தயை புரிவாய் தடுமாறுமெந்தனுக்கே
சரணம் தாயே சஞ்சித பாவங்களை வேரறுத்திடுவாய்
கயல் கண்ணாளே
0 Comments:
Post a Comment
<< Home