14 தத்துவப் பாடல்
பல்லவி
மாதவம் செய்து மானிடனாய்ப் பிறந்தனை மனமே
சோதனையிது சோம்பித் திரியாதே சோதரனே
மாதவம்
அனுபல்லவி
வேதமோதும் வேள்விகளன்றியும் வேறு வழியுண்டு
வேதனை விலகிடும் ஆசைதனை ஒழித்திட்டால்
மாதவம்
சரணம்
ஆடும் பம்பரம் நீ சாட்டை எடுத்தவனை சார்ந்திடு
நாடிடு நாளும் நல்லவர் உறவை நண்பனே
தேடிடும் இன்பமெல்லாம் கானல் நீரே கனவே
வாடிடும் பயிருக்கு மழையென சாந்தி கிட்டிடும்
மாதவம்
0 Comments:
Post a Comment
<< Home