13 கணேஷ் கார்த்திக் 07-07-2015
பல்லவி
பெருவுடையார் பேரழகி உமையவள்தன்
இருபிள்ளைகளே இருவினை தீர்த்திடுவீர்
பெருவுடையார்
அனுபல்லவி
சிறுபிள்ளைகளாய் சிறுசண்டைகள் செய்திட்டீர்
ஒரு கனி இல்லை என்று ஒருவனுக்கு
வந்ததே சினம்
பெருவுடையார்
சரணம்
தம்பிக்கென்று குறமங்கை கனிந்திடவேண்டுமென்று
தும்பிக்கை யானையாகி அச்சுரித்திய அண்ணனே
கம்பீரமாய் மயில் மீதேறி வந்து காப்பாய் முருகனே
நம்பிய எனக்கு நன்மை தருவாய் நாயகனே விநாயகனே
பெருவுடையார்
0 Comments:
Post a Comment
<< Home