16 பகவத் கீதை -1 13-17-2015
பல்லவி
பயபீதி யடைந்து பதறி நின்றப் பார்த்தனுக்கு
அபயமளித்து அருளளித்த ஆனந்த ஆசார்யனே
பயபீதி
அனுபல்லவி
ஜெயம் அஜெயம் என்பதன்றிக் கடனாற்றுவாய்
வியர்த்தமாய் சோர்ந்து நில்லாதே வீரனே என்று
பயபீதி
சரணம்
தேரென்னும் சரீரத்தை ஐம்பரிகளாம் உணர்வுகளை
சாரதியாம் அறிவினால் மனமென்னும் சாட்டை கொண்டு
வீரனே, விவேகமுடன் நடத்தி சென்றிடுவாயல்லால்
காரணமின்றிக் கட்டவிழ்ந்து ஓடிடும் ரதமென்றுணர்த்தி
பயபீதி
0 Comments:
Post a Comment
<< Home