19 நடராஜர் 23-07-2015
பல்லவி
மனோவியாதிக்கு வேறு மருந்துண்டோ மானுடனே
தினம் தினம் தில்லை நாயகனைப் பணிந்திடுவாய்
மனோவியாதிக்கு
அனுபல்லவி
சினம் கொண்டு திரிபுரமெரித்த சிவனை சிந்திப்பாய்
இனம் புரியா இன்னல் அகற்றிடும் இறைவனை நாடு
மனோவியாதிக்கு
சரணம்
தில்லை அம்பல க்ஷேத்திரத்தில் திருக்கோலம் கொண்டு
எல்லை ஏதுமில்லா கருணாமயன் எம்பெருமான் நினக்கு
தொல்லை ஏதுமின்றிக் காத்திடத் தொழுதேத்திடுவாய்
வில்லனைத்தப் புருவமுடை சிவகாமி மணாளனன்றி
மனோவியாதிக்கு
0 Comments:
Post a Comment
<< Home