22 கார்த்திகேயன் 2 26-07-2015
பல்லவி
கர்மவினைகளைக் களைந்திடவேக் கந்தனை நினைத்திடு
மர்மமேதுமில்லை மனமே மகாதேவன் பாலனிருந்திடவே
கர்மவினைகளைக்
அனுபல்லவி
நிர்மலமான மனதுடன் நித்யம் தொழுதிடு விமலனை
தர்மரக்ஷகன் தயாநிதி குமரன் காத்து நின்றிடுவான்
கர்மவினைகளைக்
சரணம்
அறுபடை வீடு கொண்ட ஆனந்தன் ஆறுமுகத்தேவன்
சிறுவனாகிலும் சீருடன் சூரனை ஆட்கொண்டவன்
வறுமைப் பிணி ஒழித்து உன்னை வாழ்ந்திடச் செய்வான்
மறுபிறவியின்றி அவனுடன்
ஒன்றிடச் செய்திடுவான்
கர்மவினைகளைக்
0 Comments:
Post a Comment
<< Home