25 திருப்பதி வடவேங்கடவன் 27-07-201525
பல்லவி
விடுதலை வேண்டி வீணில் அலைந்து திரியாதே
சுடுமணல் கொதித்திடவே நிழல் நாடி ஓடிடுவாய்
விடுதலை
அனுபல்லவி
நெடுமலை மீதேறி நிற்கும் வடவேங்கடமுடையான்
சடுதியில் வந்திடுவான் சரணமடைவாய் மனமே
விடுதலை
சரணம்
ஏழுமலை ஏறிக் களைத்து மனக்கவலை மறைந்தபின்
கீழிறங்கித் திருச்சானூர் திருத்தலம் சென்றடைந்து
வாழும் தெய்வம் பத்மாவதி தன்னைப் பணிந்திடுவாய்
பாழும் பிறவித் துயரென்னும் சிறைதன்னிலிருந்து
விடுதலை
0 Comments:
Post a Comment
<< Home