24 நாமார்ச்சனை 26-07-2015
பல்லவி
நாமார்ச்சனை செய்தால் நன்மை பெறலாம் நாமே
ஏமாற்றமில்லாமல் ஏற்றம் பெறலாம் எளிதாய்
நாமார்ச்சனை
அனுபல்லவி
காமாந்தகாரத்தில் கண் தெரியாமல் தடுமாறி நிற்கும்
நாமே நயந்துருகி நாயகனை நினைத்து நிதமும்
நாமார்ச்சனை
சரணம்
அரும் பெரும் யாகமோ அரிதான ஜபமோ தபமோ
தரும யுத்தமோ அளவில்லா தயை தானமோ
திருத்தல யாத்திரையோ தீர்த்தம் தேடி அலைதலோ
கருமம் தொலைய இவை யனைத்தும் தேவையில்லை
நாமார்ச்சனை
0 Comments:
Post a Comment
<< Home