26 நல்லதே நினைத்திடு 27-07-2015
பல்லவி
எல்லோரும் நல்லவையே நினைத்திடல் வேண்டும்
பொல்லாமை ஒழிந்திடும் புகழடைவீர் புவனிதனில்
எல்லோரும்
அனுபல்லவி
கல்லாமை ஒழிந்திடல் வேண்டும் கடல்சூழ்
தரணிதனில்
இல்லாமை இருக்கலாகாது ஏழ்மை அகன்றிட வேண்டும்
எல்லோரும்
சரணம்
தனக்கென வாழும் போது தரித்ரனையும்
நினைத்திடு
மனக் கவலைக் குறைந்திட மனதார தானம் செய்திடு
இனக்கலவரத்தால் இறைவனுக்கே ஈறு உண்டாகும்
சினம் கொள்ள வேண்டாம் சிந்திப்பாய் சிறுமதியே
எல்லோரும்
0 Comments:
Post a Comment
<< Home