31 சித்தி விநாயகர்
பல்லவி
சித்தி விநாயகனே சரணம் சரணம்
முக்தியருள்வாய் மூலாதார முதல்வா
சித்தி
அனுபல்லவி
சத்தியின் புதல்வனே சஞ்சித பாவங்கள்
நித்தியம் தொடராமல் தொலைத்திடுவாய்
சித்தி
சரணம்
ஏழை எந்தனுக்கு ஏற்றமளித்தருள்வாய்
பாழும் பாவ ஜென்மத்திற்கு வரமளிப்பாய்
வாழும் தெய்வமே வந்தனை செய்வேன்
வேழ முகத்தோனே வேதனை ஒழிப்பாய்
சித்தி
0 Comments:
Post a Comment
<< Home