29 கந்தன்
பல்லவி
கருத்துடன் கந்தனின் கழல் பணிந்திட்டால்
உருத்திரன் புத்திரன் உயர் பதவியளித்திடுவான்
கருத்துடன்
அனுபல்லவி
சிரத்தையுடன் சிவகாமி செல்வனை சிந்தித்திடு
வருத்தமேதுமில்லை வாழ்வு வளம் பெற்றிடுமே
கருத்துடன்
சரணம்
ஆணவம் கண்மம் மாயை என்னும் முத்துயரமும்
நாணின்று விடுபட்ட அம்பு பட்டு அழிந்திடுமே
வீணில் வெந்துயரில் வெந்திடாதே வாழ்நாளில்
காணும் இன்பமே சடுதியில்
வந்தடைந்திடும்
கருத்துடன்
0 Comments:
Post a Comment
<< Home