Saturday, July 25, 2020

28 வரலக்ஷ்மி


                                  பல்லவி

வரவேண்டும் என்னகத்தே திருமகளே வந்தபின
சரசரவென்று விலகாமல் நின்றிட வேண்டும்
                                                 வரவேண்டும்

                         அனுபல்லவி

தருமமிகு தாமோதரன் துணைவியே தங்கமயமே
திருவே தினமும் திருவருள் பாலித்திடவே
                                                   வரவேண்டும்

                       சரணம்

அறியாமையே அளவில்லா அத்வானக் காடு
வறுமையினும் கொடிய இதனைக் கொளுத்திடு
திறமை பெருக வரமளிப்பாய் வரலக்ஷ்மியே
சிறுமையின்றி சிறந்திட்டால் அதுவே பெருந்தனம்
                                                    வரவேண்டும்

0 Comments:

Post a Comment

<< Home