30 மனோவிஜயம்
பல்லவி
பறவையைப் போல் பறந்தலையும் மனிதா
சிறகடித்துப் பறந்து திரியும் மனதை அடக்கிடு
பறவையைப்
அனுபல்லவி
பொறாமைப் போட்டியால் அடைவதுப் பேரழிவே
சிறுமை நினைவுகளை நீக்கி சிந்தையை
விரித்திடு
பறவையைப்
சரணம்
எத்துனை உயரப் பறந்தாலும் கால்
தரையில் பாவட்டும்
சத்துள்ள சாத்திரங்களை ஆழப் படித்தோதிடுவாய்
மத்தினால் கடைந்தால் தயிர் தரும் வெண்ணெய்
சித்தத்தை சீராகத் துலக்கினால் சீர் பெருமையடைவாய்
பறவையைப்
0 Comments:
Post a Comment
<< Home