36 கணபதி 3
பல்லவி
ஐங்கரனே அய்யன் மகனே அருள் தருவாய்
கிங்கரர் வரும்போது கிலி பிடித்திடாதிருக்க
ஐங்கரனே
அனுபல்லவி
பைங்கிளி இலவுக் காத்தாற்போல் பலனுக்கு ஏங்கிடும்
சங்கடம் ஒழிந்திட சங்கரன் மகனே சரணடைந்தேன்
ஐங்கரனே
சரணம்
சந்தை நடுவே நாய் நாளும் பவனி வருதற் போலவே
சிந்தை எனது நோக்கமின்றி வீணாய் அலைந்திடுதே
மந்தையாய் ஆடுகள் போல பலிபீடத்திற்கு விரைந்திடும்
விந்தை மாந்தர் எங்களுக்கு வித்யாபதியே வரமருள்
ஐங்கரனே
0 Comments:
Post a Comment
<< Home