34 கனகதுர்கா
பல்லவி
கருணாமயீ கனகதுர்காம்பிகே காமினி
அருணோதயம் போல் ஒளிரும் அம்மா
கருணாமயீ
அனுபல்லவி
வருணிக்கலாகா வதன
சௌந்தர்யவதியே
தருணமிதே தயை புரிவாய்
தாமதமேனோ
கருணாமயீ
சரணம்
கோடை வெய்யிலென
தஹிக்கும் தாபத்ரயத்தை
சூடுமலர் கூந்தலாய்க்
குளிர்ந்திடச் செய்வாய்
வாடும் பயிறுக்கு
மழையன்ன வரமருள்வாய்
தேடித் தேடி அளைந்துக்
களைத்த என்னை ஆதரி
கருணாமயீ
0 Comments:
Post a Comment
<< Home