35 முருகன்
பல்லவி
வேலவா வேழ முகத்தோன் இளவலே
சூலம் கொண்டான் தனயனே தயாநிதியே
வேலவா
அனுபல்லவி
மாலையாய் பாமலர் தொடுத்துத் தொழுவேனே
காலன் வருங்கால் கதறிடாமல் காத்திடுவாய்
வேலவா
சரணம்
சூரனை அழித்த வேல் துருப் பிடிக்காமல்
பாரமாய் அமிழ்த்திடும் பாவமொழிப்பாய்
தீரன் நீ இருக்கையில் திகில் கொண்டிட்டுக்
காரணமின்றிக் கலங்கினேன் காத்திடுவாய்
வேலவா
0 Comments:
Post a Comment
<< Home