37 சிவன் 6
பல்லவி
கிரி வலம் செய்யும் போது மனக்குரங்கினை
திரிந்தலைய விட்டால் தீராது பாவம் மானுடா
கிரி
அனுபல்லவி
அரிதிலும் அரிதான யாகம் செய்து யாது பயன்
விரிகடல் அலை போல விசாரங்கள் மோதிட்டால்
கிரி
சரணம்
ஓமென்ற பிரணவத்தை மனதுள்ளடக்கி ஓதிடு
வாமதேவன் பரமசிவன் பஞ்சாக்ஷர மந்திரத்தை
காம க்ரோத முதலாம் அறுவைரிகளை அழித்திட
சோமாஸ்கந்தனை நாமார்ச்சனையால் தொழுதிடு
கிரி
0 Comments:
Post a Comment
<< Home