39 முருகன் 2
பல்லவி
காவியமும் கதையும் கவிதையும் என் செய்யும்
ஓவியமும் சிற்பகலா நடனமும் பயனாகுமோ
காவியமும்
அனுபல்லவி
சேவித்திடு நித்தமும் சேவற்கொடியோனை குஹனை
தாவி மயில் மீதேறி வந்து தயவுடன் காத்திடுவான்
காவியமும்
சரணம்
முருகா முருகா என்று முறையிட்டால் முக்தியுண்டு
அருகாமையில் உள்ளான் அபயக்கரம் நீட்டிடவே
கருவையும் காத்திடுவான் கடவுளப்பா கந்தனவன்
செருக்கு சினமென்னும் அறுவரை அழித்த்திடுவான்
காவியமும்
0 Comments:
Post a Comment
<< Home