38 சிவ பரிவாரம்
பல்லவி
பொய்க்கால் குதிரை ஏறி பந்தயம் கெலிக்கலாகுமா
வைக்கோல் பொம்மை தான் வாரிசாக முடியுமா
பொய்க்கால்
அனுபல்லவி
சொக்கநாதனை அடைந்துப் போற்றிப் பணிந்திடுவாய்
துக்கமில்லை இம்மை மறுமைப் பிணியும் அகன்றிடுமே
பொய்க்கால்
சரணம்
அம்மை அங்கயற்கண்ணியும் அருகிருந்தருள்வாள்
விம்மி அழுது புரண்டுப் போராடத் தேவையில்லை
தம்பியொடு முக்குருணி நாயகனும் துணையிருப்பான்
செம்மையானத் தென்மதுரை நகர் வாழும் சோமனிருக்க
பொய்க்கால்
0 Comments:
Post a Comment
<< Home