43 கபாலீஸ்வரர் 2
பல்லவி
இடபாகத்தில் அன்னைக்கு இடம் கொடுத்த ஈசா இறைவா
கடவுளேக் கருணாம்பிகையின்றிக் காப்பாய் எங்கணம்
இடபாகத்தில்
அனுபல்லவி
இடப வாகனத்தில் அமரும் போதும் அருகில்
அம்பிகை
ஜடாதாரி நீ அழைத்து வருவது அருள்வதற்கு அன்றோ
இடபாகத்தில்
சரணம்
சிவனே சக்தியின்றே ஜகத்காரகன் ஆவதில்லையே
பவரோகமழித்திடும் பவானியும் பவனி வரவேண்டுமே
கவலைகள் எங்களுக்கு இல்லாதிருக்க கபாலீஸ்வரனே
சிவசக்தி கற்பகாம்பிகைக் கடைக்கண்ணருள வேண்டாவா
இடபாகத்தில்
0 Comments:
Post a Comment
<< Home